தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

எட்டு லட்சம் மதிப்புள்ள வெங்காய மூட்டைகள் திருட்டு! - 8 லட்சம் மதிப்புள்ள வெங்காய மூட்டைகள் திருட்டு

பாட்னா: சுமார் எட்டு லட்சம் மதிப்புள்ள 328 வெங்காய மூட்டைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Thieves steal onions worth Rs 8 lakh

By

Published : Sep 23, 2019, 3:26 PM IST

பீகாரின் தலைமை இடமான பாட்னாவில் ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள வெங்காய மூட்டைகளைத் திருடர்கள் திருடிச்சென்றனர். கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே போன வெங்காயத்தின் விலை தற்போது ஒரு கிலோ 50 ரூபாய் முதல் 70 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி பாட்னாவில் உள்ள வெங்காய மொத்த விற்பனையாளர் கடையில் சுமார் 328 வெங்காய மூட்டைகள் களவாடப்பட்டன.

இதைப் பற்றி கடை உரிமையாளர் பேசுகையில், ஒவ்வொரு மூட்டையிலும்100 கிலோ வெங்காயம் இருந்தன. இதன் மதிப்பு 8 லட்சம் ரூபாய் இருக்கும். மேலும் லாக்கரில் இருந்த 1.73 லட்சம் ரூபாயும் களவாடப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து திருடர்கள் இந்த வெங்காயத்தைத் திருடிச் செல்ல நான்கில் இருந்து ஐந்து மணிநேரம் ஆகி இருக்கும் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

ABOUT THE AUTHOR

...view details