காலாப்பட்டு சுனாமி குடியிருப்பு அருகே அடிக்கடி வீடுகளில் பயன்படுத்தப்படும் சில்வர் பாத்திரம், வீட்டு உபயோகப் பொருள்கள் திருடப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து அப்பகுதி மக்கள் அடிக்கடி கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
வீட்டு பாத்திரங்களை திருடி வந்த நபர்கள் - மதுபோதையில் உறங்கியபோது பிடித்த மக்கள் - public catches thieves after they steal utensils
புதுச்சேரி: காலாபட்டு பகுதியில் சில்வர் பாத்திரங்களை திருடிவந்த இருவர் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்தபோது அப்பகுதி மக்கள் திருடர்களை கையும் களவுமாக பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் சுனாமி குடியிருப்பு பகுதியில் இரண்டு நபர்கள் பழைய பொருட்கள் கொண்ட மூட்டையுடன் மது போதையில் தூங்கிக்கொண்டிருந்தனர். அவர்களை சந்தேகித்த அப்பகுதி மக்கள் அவர்களை எழுப்பி மூட்டையை பிரித்து பார்த்தபோது மூட்டைக்குள் சில்வர் பாத்திரங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வரிசையாக எடுக்கப்பட்டன. அவை அனைத்தும் சுற்றுபகுதியில் உள்ள வீடுகளில் இருந்து திருடப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்கள் இருவரையும் பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்..
இதையும் படிங்க... மருத்துவரிடம் ரூ.7.5 லட்சம் திருடி பப்ஜி விளையாடிய சிறுவன்...!