தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருடச் சென்ற வீட்டில் தூங்கிய திருடன்! - andhra thief slept at home

அமராவதி: வீட்டின் உரிமையாளர் தூங்குவதற்காக காத்திருந்த திருடன், தன்னை மறந்து தூங்கிய விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

thief
thief

By

Published : Sep 14, 2020, 4:38 AM IST

ஆந்திரா மாநிலம் கோகவரத்தைச் சேர்ந்த சாவுதப்பள்ளி சுரேஷ் என்பவரின் வீட்டிற்குள் திருடன் ஒருவன் சென்றுள்ளான். அப்போது, வீட்டின் உரிமையாளரை சுரேஷ் வருவதை பார்த்து பயந்த திருடன், கட்டிலுக்குள் ஒளிந்து கொண்டுள்ளான். சுரேஷ் உறங்கிய பிறகு, கொள்ளையடித்து சென்றுவிடலாம் என நினைப்பில் காத்திருந்துள்ளான்.

அச்சமயத்தில், தன்னையும் மறந்து திருடன்‌ தூங்கியுள்ளான். பின்னர், காலையில் தூங்கி ஏழுந்த சுரேஷ், கட்டிலுக்கு அடியில் குறட்டை சத்ததை கேட்டு அதிர்ச்சியடைந்து பார்த்துள்ளார். உடனடியாக, வீட்டின் கதவை பூட்டிக்கொண்ட சுரேஷ், காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து விரைந்த காவல் துறையினர், திருடனை கைது செய்தனர்‌

ABOUT THE AUTHOR

...view details