தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கொரோனா அச்சுறுத்தல்: கேரளாவின் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் சோதனை - கேரளாவில் கொரோனா

திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பரவுவதையடுத்து கேரளாவில் சுகாதாரத் துறையும், தெற்கு ரயில்வேயும் இணைந்து முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளை சோதனை செய்துவருகின்றன.

Thermal screening
Thermal screening

By

Published : Mar 17, 2020, 11:12 AM IST

கேரளாவில் கொரோனா பெருந்தொற்று பரவிவருவதையடுத்து அம்மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் முனைப்புக் காட்டிவருகிறது. கேரளாவில் தற்போது வரை 24 பேர் கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையின் உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை அலுவலர்கள் மாநிலம் முழுவதும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சுகாதாரத் துறை அலுவலர்களுடன் இணைந்து தெற்கு ரயில்வேயும் கொரோனா விழிப்புணர்வுப் பரப்புரையை கேரளாவில் மேற்கொண்டுள்ளது. அதன்படி, முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளை, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவருகின்றனர். எர்ணாகுளம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்தச் சோதனையானது நடைபெறுகிறது,

கேரளா மாநிலத்தின் வழியாகச் செல்லும் ரயில்களிலும், தலைநகரில் நின்றுசெல்லும் ரயில்களிலும் பயணிகளை முழுவதும் சோதனை செய்கின்றனர். அதுமட்டுமின்றி துண்டுப்பிரசுரங்கள், காணொலி மூலமும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பணியானது நடைபெறுகிறது.

இதையும் படிங்க:'கொரோனாவைத் தடுக்க இது போதாது'- ப. சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details