டெல்லி:வேளாண் துறையில் பிற்போக்கு நடவடிக்கைகளுக்கு இடமில்லை என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய தொழில், வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் 93ஆவது வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய அவர், "கிழக்கு லடாக்கின் எல்லை கோட்டுப் பகுதியில், சீன ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவ வீரர்கள் மிகுந்த துணிவுடன் செயல்பட்டுள்ளனர்.
சீன ராணுவத்தின் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவத்தின் செயலை எண்ணி வருங்கால சமுதாயத்தினர் மிகுந்த பெருமை கொள்வர். சவாலான சூழலைப் பாராட்டத்தக்க வகையில், வலிமையுடனும், தைரியத்துடனும் நமது எல்லை வீரர்கள் எதிர்கொண்டுள்ளனர். இது உலகம் மாறி வருவதையும், எவ்வாறு இரு நாடுகளுக்கிடையேயான உடன்பாடுகள் பெரும் சவாலாக இருக்கிறது என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது" என்றார்.