தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘பஜ்ரங்தளத்தை தடை செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ - பசவராஜ் பொம்மை திட்டவட்டம் - பஜ்ரங்தளத்தை தடை செய்யும் பேச்சுக்கே இடமில்லை பசவராஜ் பொம்மை

பெங்களூரு: பஜ்ரங்தளத்தை தடை செய்யும் பேச்சுக்கே இடமில்லை என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

There is No question of prohibition of RSS and Bajarangdal: Basavaraj Bommayi said
There is No question of prohibition of RSS and Bajarangdal: Basavaraj Bommayi said

By

Published : Jan 24, 2020, 7:33 AM IST

கர்நாடக மாநிலம் தாவங்கரே மாவட்டத்தில் மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை பாஜக ஆதரவாளரும், சமூக செயற்பாட்டாளருமான லோகிகேர் நகார்ஜ் வீட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “​எச்.டி. குமாரசாமிக்கு அவர் பேசுவதைப் பற்றிப் புரியவில்லை.

மேலும் அவர் என்ன சொல்ல வேண்டும் என்று கூட தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் உள்ளிட்ட அமைப்பினர் மக்கள் கஷ்டத்தில் இருந்தபோது அவர்களுக்கு உதவியிருந்தனர். இவை தேசபக்தி அமைப்புகள். சமுதாயத்திற்கு உதவும் இந்த அமைப்புகளை எவ்வாறு தடை செய்வது?” என்றார்.

அதேபோல், மங்களூரு விமான நிலைய வெடிகுண்டு வழக்கை குறிப்பிட்டு பொம்மை பேசுகையில், ‘ஆதித்யா ராவ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. மங்களூரு காவல் ஆணையர் டாக்டர் ஹர்ஷா ஏற்கனவே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியிருந்தார். அவர் அனைத்து தகவல்களையும் வழங்கினார். உண்மை எதுவாக இருந்தாலும் அது விசாரணைக்குப் பின்னர் வெளிவரும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details