தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தமிழ்நாட்டுடன் புதுச்சேரியை இணைக்கும் திட்டம் இல்லை' - ரவி - puducherry district news

புதுச்சேரி: புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க உள்ளதாக தவறான பரப்புரையில் முதலமைச்சர் நாராயணசாமி ஈடுபடுகிறார் என பாஜக தேசிய செயலாளர் ரவி விமர்சித்துள்ளார்.

bjp
bjp

By

Published : Oct 16, 2020, 3:41 PM IST

Updated : Oct 16, 2020, 8:39 PM IST

புதுச்சேரியில் பாஜக நிர்வாகிகள் குழு கூட்டம் பாஜக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய பொதுச் செயலாளரும், எம்எல்ஏவுமான ரவி கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "பாஜகவில் இணைய விரும்பி பல்வேறு தலைவர்கள், எம்எல்ஏக்கள் தங்களை தொடர்பு கொண்டுள்ளனர். தங்களின் அடிப்படை இலக்கு கட்சியை பலப்படுத்துவது தான். வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் தாமரை மலரும்.

கரோனா காலத்தில் புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் அரசு தோல்வியடைந்துள்ளது. அதனால் தான் புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் மத்திய அரசு இணைக்க உள்ளதாக தவறான பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது தோல்வியை மறைக்கவே முதலமைச்சர் நாராயணசாமி பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார்" என்றார்.

இதையும் படிங்க:'கிராமப்புற மாணவர்களின் வருத்தங்களும், வேதனைகளும் அளவிட முடியாதது"- கண் கலங்கிய நீதிபதி கிருபாகரன்!

Last Updated : Oct 16, 2020, 8:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details