மக்களவைத் தேர்தலில் வாக்கு இயந்திரத்துடன் வாக்கு ஒப்புகைச் சீட்டும் பயன்படுத்தப்பட்டது. எதிர்க்கட்சிகள் வாக்கு இயந்திரம் நம்பகத்தன்மையுடன் இல்லை எனக் கூறி தொடரந்து தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். வாக்கு இயந்திரங்களை தயாரித்த பெல் நிறுவனத்தின் தலைவர் எம்.வி.கவுதமா செய்தியாளர் சந்திப்பை இன்று நடத்தினார்.
'வாக்கு இயந்திரத்திலும் வாக்கு ஒப்புகைச் சீட்டிலும் வேறுபாடு இல்லை' - வாக்கு இயந்திரம்
பெங்களூரு: வாக்கு இயந்திரத்திலும், வாக்கு ஒப்புகைச் சீட்டிலும் பதிவான வாக்குகளில் வேறுபாடு காணப்படவில்லை என பெல் நிறுவன தலைவர் கவுதமா தெரிவித்துள்ளார்.
!['வாக்கு இயந்திரத்திலும் வாக்கு ஒப்புகைச் சீட்டிலும் வேறுபாடு இல்லை'](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3443737-thumbnail-3x2-bel.jpg)
M.V.Gauthama
அதில் அவர், "மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரத்திலும், வாக்கு ஒப்புகைச் சீட்டிலும் வேறுபாடு காணப்படவில்லை. வாக்கு இயந்திரங்களில் தவறுகள் நடக்கவில்லை. வாக்கு இயந்திரங்களின் மீது சுமத்தப்பட்ட சர்ச்சைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.
நாட்டில் ஜனநாயகம் தழைக்க வேண்டுமானால் வாக்கு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும். வாக்கு இயந்திரங்களில் தவறுகள் நடந்தாலும் கண்டுபிடித்துவிடலாம்" என தெரிவித்தார்.