தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகா பாஜகவுக்குள் கருத்து வேறுபாடு இல்லை...! - கர்நாடாக பாஜக பிரச்னை

பெங்களூரு: கர்நாடகா பாஜகவுக்குள் எந்த பிளவும் இல்லை என்று அம்மாநில அமைச்சர் கோபாலய்யா, முருகேஷ் நிரணி எம்எல்ஏ ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

There is No Dissent  முருகேஷ் நிரணி  கர்நாடாக பாஜக பிரச்னை  எடியூரப்பா ஆட்சிக்கு சிக்கல்  கர்நாடாக பாஜக பிரச்னை  karnataka bjp issue  There is No Dissent in karnataka  mugesh nirani  கர்நாடாக பாஜக பிரச்னை
கர்நாடாக பாஜகவுக்குள் பனிப்போரோ, பிளவோ இல்லை

By

Published : May 30, 2020, 10:51 AM IST

கர்நாடகா பாஜகவுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது, இது ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக அமையலாம் என்ற தகவல் கர்நாடகா மாநிலம் முழுவதும் பரவிவருகிறது. மேலும், பாஜக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ரகசியக் கூட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. இது குறித்து, கர்நாடக மாநில எம்.எல்.ஏ முருகேஷ், அமைச்சர் கோபாலய்யா ஆகியோர் நமது ஈடிவி பாரத்திடம் பேசினர்.

கர்நாடகா எம்.எல்.ஏ. முருகேஷ் நிரணி, முதலமைச்சரை மாற்றுவது குறித்த எந்தக் கூட்டத்திலும் தான் கலந்துகொள்ளவில்லை. நாங்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். எங்கள் கட்சிக்கு விரோதமான செயல்களை நாங்கள் செய்யமாட்டோம். எங்களுக்குள் ஏதேனும் கருத்துவேறுபாடு இருந்தால், அதனை மேல்மட்ட தலைவர்களுக்கு கொண்டு சென்று தீர்வு காண்போம்" என்றார்.

கர்நாடகா மாநில அமைச்சர் கோபாலய்யா, கட்சிக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளை எடியூரப்பா கவனித்துக்கொள்வார். அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தியதாக கூறப்படும் செய்தி குறித்து எனக்கு எதுவும் தெரியாது. கட்சிக்குள் எதிர்பாராத விதமான தவறுகள் நேர்ந்தால் எங்கள் தலைமை அந்த பிரச்னையை கையாண்டு தீர்வு காணும்" என்றார்.

இதையும் படிங்க:இந்தியாவின் அரிசிக் கிண்ணமாக தெலங்கானாவை மாற்றும் பணியில் இறங்கிய கேசிஆர்!

ABOUT THE AUTHOR

...view details