தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வன்முறைக்கு காரணம் பாஜக, ஆர்.எஸ்.எஸ்' - காங்கிரஸ் குற்றச்சாட்டு - பாஜக

போபால்: இந்தியாவில் நடக்கும் கூட்டு வன்முறைகளுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

திக் விஜய சிங்

By

Published : Jul 7, 2019, 12:05 PM IST

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் நடக்கும் கூட்டு வன்முறைகளுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று மக்களுக்கு சரியான நேரத்தில் நீதி கிடைக்காமல் இருப்பது. மற்றொன்று மக்களின் மனநிலையை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மாற்றியது. இதற்கு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா ஒரு எடுத்துக்காட்டாகும்" என்றார்.

முன்னதாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ஆகாஷ் விஜய்வர்கியா மாநகராட்சி ஊழியரை தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details