தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 20, 2019, 7:15 PM IST

ETV Bharat / bharat

மனநலம் குன்றிய பிகார் இளைஞரை மீட்ட தேனி காவல் துறையினர்!

தேனி: பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் குன்றிய பிகார் இளைஞரை மீட்ட காவல் துறையினர், அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர்.

bihar

பெரியகுளம் அருகே உள்ள முருகமலை வனப்பகுதியில் கடந்த சில தினங்களாக சந்தேகப்படும்படியான வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றித்திரிந்து வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், முருகமலை வனப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட வடகரை காவல் துறையினர், அந்த இளைஞரைச் சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர் மனநலம் குன்றியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த இளைஞரை மீட்ட காவல் துறையினர், ஆண்டிபட்டியில் உள்ள தொண்டு நிறுவனத்தின் காப்பகத்தில் தங்கவைத்தனர்.

குடும்பத்துடன் மீட்கப்பட்ட பிகார் இளைஞர்

இதனிடையே, சம்பந்தப்பட்ட அந்த இளைஞர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது தாய் பரிமளா, சகோதரர் மண்ட்டு பஸ்வான் ஆகியோர் மூலம் தெரியவந்தது. பின்னர், இன்று காலை, பெரியகுளம் காவல் நிலையத்திற்கு வந்த இளைஞரின் குடும்பத்தினர் அவரை அழைத்துச் சென்றனர்.

இந்த இளைஞர் காணாமல்போனது சம்பந்தமாக ஏற்கனவே காவல் துறையில் புகார் அளித்து, பல இடங்களில் தேடிவந்ததாகவும், அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

முருகமலையிலிருந்து மீட்கப்பட்ட அந்த இளைஞர் பிகார் மாநிலம் கதிகர் மாவட்டத்திலுள்ள மன்ச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதனடிப்படையில், அவரது தாய், சகோதரர் எங்களுடன் தொடர்பு கொண்டு, பெரியகுளம் காவல்நிலையம் வந்து அழைத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details