சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு நேற்று பிற்பகலில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குடும்பத்தினருடன் வருகை தந்தார். கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர் அறை எடுத்து தங்கியிருந்தார். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் முக்கடல் சங்கமம், கடற்கரை சன்செட் பாயிண்ட் போன்ற பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்ததோடு, சூரிய அஸ்தமனத்தையும் கண்டு களித்தார்.
கடல் அழகை ரசிக்கமுடியவில்லை - அறையை காலி செய்த தெலங்கானா முதலமைச்சர்! - chandrashekar rao
கன்னியாகுமரி: கடல் அழகை ரசிக்க முடியவில்லை எனக் கூறி தான் தங்கியிருந்த ஓட்டல் அறையை தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் திடீரென மாற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், விடுதிக்குத் திரும்பிய அவர், தான் தங்கியிருந்த அறையில் இருந்து கடல் அழகை ரசிக்க முடியவில்லை என கூறியதோடு, உடனடியாக அறையை மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார். பின்னர் அவரது வேண்டுகோளை ஏற்ற அதிகாரிகள், உடனடியாக கேரள அரசின் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான தங்கும் விடுதியில் தங்க ஏற்பாடுகளைச் செய்தனர். இதையடுத்து, கன்னியாகுமரியில் இருந்து தனது அறையை காலி செய்து விட்டு குடும்பத்துடன் கேரளவிற்கு சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், நாளை காலை கேரளவில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, ராமநாதபுரம் செல்கிறார். 10ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும், 11ஆம் தேதி ஸ்ரீரங்கம் கோயிலிலும் சாமி தரிசனம் செய்கிறார்.