உத்தரப் பிரதேசம் மாநிலம், அலிகார் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் சேமிப்பு நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் நிரப்புவதற்கு மூன்று பேர் நேற்று இரவு வந்துள்ளனர்.
ஓசியில் பெட்ரோல், பணம்...! துப்பாக்கி முனையில் துணிகரம் - துப்பாக்கி முனையில் வழிப்பறி
லக்னோ: பெட்ரோல் சேமிப்பு நிலைய ஊழியரை அடையாளம் தெரியாத மூன்று பேர் துப்பாக்கி காட்டி மிரட்டி பெட்ரோல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![ஓசியில் பெட்ரோல், பணம்...! துப்பாக்கி முனையில் துணிகரம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3901519-thumbnail-3x2-hg.jpg)
Theft in petrol bunk
அப்போது அங்குள்ள ஊழியர் பெட்ரோல் நிரப்பியவுடன் பணத்தை கேட்டுள்ளார். அதற்கு அந்த நபர்கள் பெட்ரோலுக்கு காசு கொடுக்க மறுத்து, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டி மிரட்டி ஊழியரிடமிருந்து ரூ.2,500 பணத்தை பறித்துச் சென்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த அவர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பெட்ரோல் சேமிப்பு நிலையத்திலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.