பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுடன் மீட்டிங் நடத்தவும், மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கும் ஜூம் செயலி அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சீனாவைச் சேர்ந்த ஜூம் செயலியில் பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஜியோ நிறுவனம் ஜூம் செயலிக்கு மாற்றாக ஜியோ மீட் என்ற செயலியை வெளியிட்டது. ஜியோ மீட் செயலி பார்ப்பதற்கு, ஜூம் செயலியைப் போல இருப்பதாகப் பலரும் கலாய்க்க தொடங்கினர். இருப்பினும், சீன நிறுவனங்களின் மீது வளர்ந்துவரும் வெறுப்பாலும், ஜியோ மீட் இந்தியச் செயலி என்பதாலும் இது இணையத்தில் ஹிட் அடித்தது.
ஜூம் செயலியில் இல்லாத சில முக்கிய வசதிகள் ஜியோ மீட் செயலியில் வழங்கப்பட்டுள்ளன. அதவாது ஜூம் செயலியில் 40 நிமிடங்களுக்கு மேல் ஒரு குரூப் காலில் பேச முடியாது. அவ்வாறு பேச வேண்டும் என்றால் மாதத்திற்கு 15 டாலர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால், ஜியோவில் இதுபோல எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஜியோ மீட் என்பது முற்றிலும் இலவசமானது.
இதனால், ஆசிரியர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஜியோ மீட் செயலியைப் பயன்படுத்தி பாடங்களை நடத்தலாம். அதேபோல, மாணவர்களும் நேரம் குறித்த கவலையின்றி தங்கள் சந்தேகங்களைத் தெளிவாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.