தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அனைத்து மத்திய காவல் படை வீரர்களின் ஓய்வுபெறும் வயது 60: மத்திய அரசு அறிவிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படை வீரர்கள் குறித்து அறிவிப்பு

டெல்லி: மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட அனைத்து மத்திய காவல் படை வீரர்களுக்கு ஓய்வுபெறும் வயது 60 ஆக அறிவித்து மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

crpf

By

Published : Aug 20, 2019, 2:59 PM IST

மத்திய உள் துறை அமைச்சகம் அனைத்து மத்திய ஆயுத காவல் படை வீரர்களின் ஓய்வுகாலத்தை 60ஆக நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன்மூலம் மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தோ திபெத் எல்லை பாதுகாப்புப் படை, தொழில் பாதுகாப்புப் படை, ஆயுதப் படை உள்ளிட்ட அனைத்து மத்திய காவல் படைகளுக்கு ஓய்வுபெறும் வயது 60ஆக அறிவித்து மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதற்குமுன் மத்திய தொழில் துறை பாதுகாப்புப் படை, அஸ்ஸாம் ரைபிள்ஸ் பணியாளர்கள் ஆகியோருக்கு ஓய்வுபெறும் வயது 60ஆக இருந்தது.

மத்திய காவல் படை வீரர்களின் ஓய்வுபெறும் வயது 60

ஆனால், சி.ஆர்.பி.எஃப்., பி.எஸ்.எஃப்., ஐ.டி.பி.பி., எஸ்.எஸ்.பி. உள்ளிட்ட பிரிவுகளில் கான்ஸ்டபிள் பதவிகளிலிருந்து கமாண்டன்ட் வரையிலான பணியாளர்களுக்கு ஓய்வுபெறும் வயது 57ஆக இருந்தது.

இது குறித்து இந்தாண்டு ஜனவரியில் டெல்லி உயர் நீதிமன்றம் இரண்டு வகுப்புகளாக பிரித்து இப்படி நடப்பது பாரபட்சமானது; அரசியலமைப்பிற்கு முரணானது எனத் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, மத்திய உள் துறை அமைச்சகம் உயர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, அனைத்து மத்திய காவல் படை பணியாளர்களுக்கும் ஓய்வுபெறும் வயது 60ஆக நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details