புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ்அப்பில் செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், “குடியரசுத் தலைவர் மாளிகையில் பின்பற்றப்படும் செலவுக் கட்டுப்பாடுகள் புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலும் பின்பற்றப்படும். அதேபோல புதுச்சேரியிலுள்ள அனைத்துத் துறைகளும் சேமிப்பு மற்றும் செலவுகளைக் குறைக்க வேண்டும் என அறிவுறுத்துகிறேன்.
’சிக்கனத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையை ஆளுநர் மாளிகை பின்பற்றும்’ - கிரண்பேடி - kiran bedi news
புதுச்சேரி: குடியரசுத் தலைவர் மாளிகையில் பின்பற்றப்படும் செலவுக் கட்டுப்பாடுகள் புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலும் பின்பற்றும் என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
kiran bedi news
சம்பளம், ஓய்வூதியம், சுகாதாரம், கல்வி, ஏழை மக்களுக்கு இலவச அரிசி போன்றவற்றின் அடிப்படையிலேயே செலவுகள் இருக்க வேண்டும். இதுவரை பணத்தை இழந்துவரும் சேவைகளிலிருந்து வருமானத்தைப் பெருக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் எனது மாத ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.