இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலர் முனுசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " வரும் திங்கட்கிழமை 20ஆம் தேதி காலை 9 மணியளவில் கூடும் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும்.
ஜூலை 20 இல் ஆளுநர் உரையுடன் தொடங்கும் புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர்! - Puducherry Legislative Assembly will convene on July 20 with a speech by the Governor
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை வரும் 20ஆம் தேதி காலை 9 மணியளவில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையுடன் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூலை 20 அன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கும் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்!
இதனைத் தொடர்ந்து 12:05 மணிக்கு புதுச்சேரி யூனியன் பிரதேச முதலமைச்சர் நாராயணசாமி 2020 - 2021 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்" என, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக புதுச்சேரி சட்டப்பேரவை 14ஆவது நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி அன்று தொடங்கும் என, சட்டப்பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.