புதுச்சேரி கூட்டுறவுத் துறை வளாகத்தில் இன்று மின் துறை தொடர்பான மக்கள் அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய மின் துறை இணை ஆணையத்தின் தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கோயல் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். புதுச்சேரி மின் துறையின் உயர் அலுவலர் முரளி, துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ஒருவர், வெறும் 500 ரூபாய் மின் பாக்கி வைத்திருப்பவர்களின் வீட்டு மின் இணைப்பைத் துண்டிக்கும் மின்துறை, ஏன் பல லட்ச ரூபாய் மின் பாக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களின் மின் இணைப்பைத் துண்டிக்க முன்வருவதில்லை என்று கோயலிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் தற்போது அரசுத் துறை வைத்துள்ள மின் பாக்கி எவ்வளவு எனக் கேள்வி எழுப்பியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.