புதுச்சேரி யூனியன் பிரதேச காங்கிரஸ் கூட்டணி சார்பில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி ஜனவரி 8ஆம் தேதி முதல் தர்ணா போராட்டம் நடைபெற்று வந்தது. ஜனவரி 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலையுடன் போராட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
கிரண்பேடியை திரும்பப் பெறக்கோரிய தர்ணா போராட்டம் முடிவுக்கு வந்தது - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
புதுச்சேரி: துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி மூன்றாவது நாளாக நடைபெற்று வந்த தர்ணா போராட்டம் இன்று (ஜனவரி 10) மாலையுடன் முடித்துக் கொள்ளப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், போராட்டம் திருப்பப் பெறப்பட்டுள்ளதாக கூறினார். ஜனவரி 22ஆம் தேதி "கிரண்பேடியே திரும்பி போ" என்ற கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்றும், பிப்ரவரி 1ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார்.
மேலும், கிரண்பேடியை வெளியேற வலியுறுத்தி அடுத்த மாதம் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.