கர்நாடக மாநிலம் சகாராவிலிருந்து பெங்களூருவிற்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று நேற்று வழக்கம் போல் பயணிகளை ஏற்றி சென்றுக் கொண்டிருந்தது.
இந்நிலையில் பேருந்தானது உல்லூரு கிராமத்தின் அருகே சென்று கொண்டிருக்கையில் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
சற்றும் எதிர்பாராத நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனிடையே விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் பேருந்து கவிழ்ந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.