17ஆவது மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 இடங்களில் அமோக வெற்றிபெற்றது. இதில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது.
இன்று மாலை வெளியாகும் அமைச்சரவை பட்டியல்? - PM
டெல்லி: மத்திய அமைச்சரவையில் இடம்பெற உள்ள அமைச்சர்கள் இன்று மாலை மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மோடி - அமித் ஷா
இதனையடுத்து, இரண்டாவது முறையாக மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்க உள்ளார். இதற்கிடையே, அமைச்சரவை பட்டியல் தொடர்பாக பாஜக தலைவர் அமித் ஷா, மோடியுடன் 3ஆவது நாளாக தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில், இன்று மாலை 4.30 மணிக்கு அமைச்சரவை பட்டியல் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் அப்போது புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் மோடியை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.