கரோனா வைரஸ் தாக்கம் காரணமாகவும், ஊரடங்கு உத்தரவு காரணமாகவும் நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிவை சந்தித்துள்ளது. அதனை சரிகட்டவும், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் மீண்டும் உற்பத்திப் பணியை தொடங்கவும் ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார ஊக்க அறிவிப்பு வெளியிடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கடந்த நான்கு நாட்களாக பொருளாதார ஊக்க அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். அதில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதையடுத்து இன்று காலை 11 மணிக்கு கடைசி கட்ட பொருளாதார ஊக்க அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
இதற்கிடையில் பொருளாதார அறிஞர்கள், "பொருளாதார ஊக்கப் பட்ஜெட்டில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் ஏற்கெனவே ரிசர்வ் வங்கி அறிவித்த பணப்புழக்க நடவடிக்கைகள், வங்கிகளின் கடன் வழங்கும் திட்டங்களுடன் சேர்த்து 20 லட்சம் கோடி ரூபாய் என கூறுவதாகவும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் எந்தப் பலனும் வரப்போவதில்லை என்றும் கூறுகின்றனர்.