சீனாவில் இருந்து பரவி வந்த கரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது. மேலும் கோவிட்-19 வைரஸால் இந்தியாவில் ஏற்கனவே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், இன்றும் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தியாவில் 206 பேர் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகவலை மத்திய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான பீதி மக்களிடையே நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. மேலும் கோவிட்- 19 தொற்று வைரஸிலிருந்து தற்காத்துக்கொள்ள அரசு பல்வேறு விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொள்கிறது.