சீனாவை அச்சுறுத்தி வரும் கோவிட்-19 காய்ச்சல் ஈரான், தென்கொரியா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிவேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து, ஒவ்வொரு நாட்டிற்கும் உலக சுகாதார அமைப்பு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஐரோப்பிய ஒன்றியங்கள் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கரோனா வைரஸ் பரவுவதை எதிர்த்துப் போராடும் வகையில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன், எல்லைப்பகுதிகளில் வெளிநாட்டவர்கள் நுழைய 30 நாள் தடையை விதித்தார். பிரான்ஸ் நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால், வர்த்தகத்துறையில் ஏற்படும் பதற்றத்தைக் குறைக்க வணிக நிறுவனங்களை ஆதரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலமாக மக்களிடம் பேசிய அவர், பொருளாதார சரிவு குறித்து அஞ்ச வேண்டாம் என்றும், சிறிய நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடை வாடகை, கட்டணங்கள் ஆகியவற்றிற்கு அரசு உத்தரவாதம் உண்டு எனவும் உறுதியளித்தார்.