ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டம், பெதகூரபாடு மண்டலத்தில், லகதாபாட்டின் வத்திக்குட்டி சைதராவ் என்பவரிடம் ஸ்வீட்டி என்கிற நாய் உள்ளது. கிரேட் டேனி இனத்தைச் சேர்ந்த இந்த நாய் முதல் பிரசவத்தில் 10 குட்டிகளைப் பெற்றது.
ஒரே பிரசவத்தில் 18 குட்டிகளை ஈன்ற நாய்! - Dogs brith
ஹைதராபாத்: குண்டூர் மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 18 குட்டிகளை நாய் ஒன்று ஈன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நாய்க்குட்டிகள்
தற்போது இரண்டாவது பிரசவத்தில் 18 குட்டிகளை ஈன்றுள்ளது. அதில் 11 பெண் நாய்க்குட்டியும், 7 ஆண் நாய்க்குட்டியும் அடங்கும். தற்போது தாயும், அனைத்துக் குட்டிகளும் நலமுடன் உள்ளன.
இது குறித்து பெதகூரபாடு மாவட்டத்தில் பணியாற்றும் கால்நடை மருத்துவர் கோமதிநேனி ராகவயா கூறுகையில், “ஒரே பிரசவத்தில் 18 குட்டிகள் பிறப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று” எனக் கூறியுள்ளார்.