தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'இடது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட மருத்துவர்' - சக மருத்துவர்கள் அதிர்ச்சி - மருத்துவர் தற்கொலை

புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தனது இடது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சக மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இடது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவர் - சக மருத்துவர்கள் அதிர்ச்சி
இடது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்ட மருத்துவர் - சக மருத்துவர்கள் அதிர்ச்சி

By

Published : Jul 11, 2020, 1:10 PM IST

Updated : Jul 11, 2020, 8:29 PM IST

புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள தேசிய தரம் வாய்ந்த ஜிப்மர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர், டாக்டர் சஞ்சீவ். இவர் ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனது குடியிருப்பில் தங்கிப் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், அவர் தனது குடியிருப்பு இல்லத்தில், இடது கையில் ரத்தக்காயம் ஏற்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இதனைக் கவனித்த மருத்துவமனை பணியாளர்களும், சக மருத்துவர்களும் உடனடியாக, இது பற்றி புதுச்சேரி காவல் துறைக்குத் தகவல் கூறினர். இதையடுத்து புதுச்சேரி கோரிமேடு தன்வந்தரி நகர் காவல் துறையினர் சம்பவ இடம் வந்தனர்.

தொடர்ந்து காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும், அவருக்கு வயது 24 என்றும், நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், ஜிப்மரில் முதுகலை படித்து கொண்டே மருத்துவராகப் பணியாற்றுகிறார் என்றும் காவல் துறை விசாரணையில் தெரியவந்தது. மருத்துவர், தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jul 11, 2020, 8:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details