தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விருப்பமில்லாதவருக்கு மணமுடிக்க முயற்சி; பாஜக பிரமுகருக்கு எதிராக மகள் போர்க்கொடி! - Madhya Pradesh High Court bharti Singh

போபால்: விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி தனக்கு போதை ஊசி செலுத்தியதாக பாஜக முன்னாள் எம்எல்ஏவின் மகள் தன் தந்தைக்கு எதிராக வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BJP

By

Published : Oct 21, 2019, 8:30 AM IST

போபால் தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுரேந்திர நாத் சிங் பாஜகவைச் சேர்ந்தவர். இவர் தனது மகளை அவருக்கு விருப்பமில்லாத ஒருவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தியாகத் தெரிகிறது. இதுகுறித்து அவரின் மகள் பாரதி சிங், "என் விருப்பத்திற்கு எதிராக திருமணம் செய்துவைக்க என குடும்பத்தினர் முயற்சிக்கின்றனர். போதை ஊசி ஒன்றை என உடம்பில் இதற்காக செலுத்தினர். வீட்டை விட்டு வெளியேறிய பிறகு பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளேன்.

என் மனநிலை சீராக உள்ளது. ஆனால், என் மனநிலை குறித்து பொய்யான ஆவணங்களைத் தயார் செய்து என் குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர். என் வீட்டிற்குச் செல்ல எனக்கு விருப்பமில்லை" என தன் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து காவல் ஆய்வாளர் விஜய் சிசோடியா, "மனநிலை பாதிக்கப்பட்ட பாரதி சிங் காணவில்லை என கம்லா நகர் காவல் நிலையத்தில் சுரேந்திர நாத் சிங் வழக்குப்பதிவு செய்துள்ளார்" என்றார். இந்நிலையில் பாதுகாப்பு வேண்டி மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தை பாரதி சிங் அனுகியுள்ளார்.

இதையும் படிங்க: அமெரிக்க உயிரியல் பூங்காவில் குட்டி ஈன்ற விசித்திர விலங்கு!

ABOUT THE AUTHOR

...view details