புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாதுகாப்புப்படையினரின் பாதுகாப்பு கருதி பல நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் செல்ல 'திடீர்' தடை! - ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலை
கஷ்மீர்: புல்வாமா தாக்குதலை அடுத்து ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வாரத்தின் இரண்டு நாட்கள் பொதுமக்கள் செல்ல தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடையானது வரும் மே மாதம் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர் ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் செல்லத் தடை
இதன் ஒருபகுதியாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையை வாரத்தில் சனி மற்றும் புதன் கிழமைகளில் மாலை நான்கு மணி முதல் ஐந்து மணி வரை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடைசெய்யப்பட்ட நேரத்தில் பாதுகாப்பு படையினரின் கான்வாய்கள் இந்த சாலையில் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.