புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டன. அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொருட்கள் வாங்க பொதுமக்கள் தேவையில்லாமல் கடைகளில் கூட்டம் கூடுவதாகவும், வர்த்தக நிறுவனங்கள் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால் பல வர்த்தக நிறுவனங்கள் இதனை கடைப்பிடிக்க தவறியது மேலும் ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இதையடுத்து புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமை செயலர் அஸ்வின் குமார், குடிமைப்பொருள் செயலர்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் வியாபாரிகள் கலந்து கொண்ட கூட்டம் இக்கூட்டத்தின்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு மாதத்திற்கு இருப்பு வைக்குமாறும், பொதுமக்களுக்கு அதிக விலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்க வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்துகொண்ட வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது