தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரோவில்லில் 20ஆவது குதிரையேற்றப் போட்டி: நாளை முதல் மார்ச் 1 வரை... - 20th horse competition

புதுச்சேரி: ஆரோவில்லில் இருபதாவது குதிரையேற்றப் போட்டி நாளை தொடங்கி மார்ச் 1 வரை தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெறவிருக்கிறது.

pudhucherry
pudhucherry

By

Published : Feb 27, 2020, 4:52 PM IST

இது குறித்து போட்டி ஒருங்கிணைப்பாளரும், ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளி உரிமையாளருமான ஜாக்குலின் கபூர், "புதுச்சேரி ஆரோவில்லில் 20ஆம் ஆண்டு குதிரையேற்றப் போட்டி ரெட் எர்த் குதிரையேற்றப் பள்ளியில் நாளை (28ஆம் தேதி) தொடங்கவுள்ளது. மார்ச் 1 வரை தொடர்ந்து மூன்று நாள்கள் நடக்கவிருக்கிறது.

ஜாக்குலின் கபூர் பேசியபோது

'ஆரோவில் குதிரையேற்றப் போட்டி' என்னும் தலைப்பில் நடைபெறும் அப்போட்டியில் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூரு, புதுச்சேரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பன்னிரெண்டு குதிரை கிளப்களைச் சேர்ந்த 60 குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இதன் தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்தப் போட்டிகள் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையிலும் நடக்கின்றன. டான்சிங், ஜம்பிங் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. போட்டிகளைக் காண அனுமதி இலவசம்" எனச் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஐ.எஸ்.எல். அரையிறுதியில் கோவாவுடன் மோதும் சென்னை!

ABOUT THE AUTHOR

...view details