டெல்லி சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை (டிசம்பர் 8) தேர்தல் நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லியில், ஆம் ஆத்மி தற்போது 61 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை ஆம் ஆத்மி எளிதில் வெற்றிபெறும் என்ற சூழ்நிலையில், அக்கட்சியின் உறுப்பினர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலை இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லிக்கு நன்றி" என்று ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக, பிகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இருந்தார். டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற சிறிது நாள்களே இருந்தபோது, அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணியிலிருக்கும்போதே, பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மிக்கு பணியாற்றியது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
முன்னதாக ஜனவரி 30ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "எனது எதிர்காலத் திட்டங்கள் குறித்து நான் பிப்ரவரி 11ஆம் தேதி பாட்னாவில் உங்களுக்குக் கூறுகிறேன்" என்றார். இந்நிலையில் அந்த நாளும் இன்று வந்து விட்ட நிலையில், பிரசாந்த் கிஷோர் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டெல்டா விவகாரம் - நாடாளுமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு