தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தஞ்சாவூர் தளம் முக்கியமானது ஏனென்றால்... - தஞ்சாவூர் தளம் குறித்து பிபின் ராவத்

தஞ்சாவூர்: தெற்கு  தீபகற்பத்தின் முக்கிய இடத்தில் தஞ்சாவூர் அமைந்துள்ளதால் இது முக்கிய தளம் என்றும் அங்கிருந்து கடலில் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றும் முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

Bipin Rawat about Thanjavur airbase
Bipin Rawat about Thanjavur airbase

By

Published : Jan 20, 2020, 6:08 PM IST

Updated : Jan 20, 2020, 7:02 PM IST

பிரமோஸ் ஏவுகணைகளை தாங்கிய சுகாய் 30 ரக விமானங்கள் தஞ்சை விமானப்படை தளத்தில் நிலைறுத்தப்பட்டு விமானப் படைத்தளம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விழாவில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி ஆர்கே பதூரியா, தென்னிந்திய விமானப்படை தளபதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் பல்வேறு போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சுகோய் 30 ரக போர் விமானத்துக்கு தஞ்சை விமானப்படை தளத்தில் தண்ணீர் தெளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முப்படை தளபதி பின் ராவ், "ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்துவதை தடுக்க, அதற்கேற்ற கருவி தயாரிக்கப்பட்டுவருகிறது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகிறது.

இந்த சூழ்நிலையில் தேசப்பற்றுடன் பணியாற்றக்கூடிய இளைஞர்களை முப்படைகளில் சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்திய படைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. நம் படைகள் பலமாகவே உள்ளன" என்றார்.

முப்படை தளபதி பிபின் ராவத் செய்தியாளர் சந்திப்பு

மேலும், பாகிஸ்தானுடன் சண்டை வருமா என்று செய்தியாளர் கேட்டதற்கு, "படைகள் சண்டைக்குத் தயாராக உள்ளன ஆனால் போர் வருமா என்று எனக்குத் தெரியாது" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "தஞ்சாவூர் தெற்கு தீபகற்பத்தின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இந்திய கடற்படையால் கடலில் ஆதிக்கம் செலுத்த முடியும். தேவைப்பட்டால் ராணுவ படையையும் இங்கிருந்து அனுப்பமுடியும்" என்றார்.

இதையும் படிங்க: ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பான மத்திய அரசின் முடிவிற்கு தினகரன் கண்டனம்!

Last Updated : Jan 20, 2020, 7:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details