தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மானிய அரிசிக்கான நிலுவை தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும்: தம்பிதுரை கோரிக்கை! - Thambidurai asks To relase cm subsidy amount

மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு வழங்கவேண்டிய அரிசிக்கான மானியத் தொகையான ரூ.5 ஆயிரத்து 445 கோடி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை கோரிக்கை விடுத்துள்ளார்.

thambidurai-asks-to-relase-cm-subsidy-amount
thambidurai-asks-to-relase-cm-subsidy-amount

By

Published : Sep 18, 2020, 10:37 PM IST

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் செப்.14ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று மாநிலங்களையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பேசுகையில், ''கடந்த இரண்டு வருடமாக மத்திய அரசால் வழங்க வேண்டிய அரிசிக்கான மானியத் தொகையை விடுவிக்க வேண்டும். கிட்டத்தட்ட மாநில அரசு சார்பாக விவசாயிகளுக்கு ரூ. 4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே கரோனா வைரஸ் தாக்குதலால் அதிக செலவுகள் ஆகின்றது. இதனை சமாளிக்க வேண்டிய தேவை உள்ளது. இதனால் மத்திய அரசால் தமிழ்நாட்டிற்கு 2018, 2019ஆம் ஆண்டுக்கான மானிய அரிசிக்கான நிலுவைத் தொலை ரூ.5 ஆயிரத்து 445 கோடி நிலுவையை உடனடியாக வழங்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:பஞ்சாபில் வலுக்கும் எதிர்ப்பு : மூன்றுநாள் தொடர் ரயில் மறியல் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details