தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஒருவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள பள்ளியில் தனது குழந்தையை கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு சேர்த்தார். இதனிடையே, கேரளாவைச் சேர்ந்த முகமது இன்சாஃப் என்பவருடன் முகநூலில் நண்பராக இருந்துவந்துள்ளார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தனது குழந்தையை சந்திக்கச் சென்ற அந்தப் பெண், மலப்புரத்திலுள்ள விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது, அவரை பார்க்க வந்த முகமது இன்சாஃப், தனது நண்பர் அன்சாருதீன் என்பவரையும் அழைத்துச் சென்றார்.