கடந்த வாரமே இந்தியா வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரேபிட் சோதனைக் கருவிகள் நேற்று இந்தியா வந்தன. சுமார் ஐந்து லட்சம் ரேபிட் சோதனைக் கருவிகள் தற்போது இந்தியா வந்துள்ளன. இதன்மூலம் விரைவில் பரிசோதனைகள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரேபிட் சோதனைக் கருவிகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ளது. அதில், ரேபிட் சோதனைக் கருவிகள் ஒருவருக்கு வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறியப் பரிந்துரைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைமை அறிவியல் அறிஞர் கங்காதர் கூறுகையில், "இந்த ரேபிட் சோதனைக் கருவிகள் மூலம் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று உள்ளதா என்பதை 80 விழுக்காடு வரையே துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.