கோவிட்-19க்காக 1.3 பில்லியன் மக்களை பரிசோதிப்பது சாத்தியமில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு அளித்தப் பேட்டியில் கூறினார்.
இந்தியாவில் கரோனா சோதனை பற்றிய நிலை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தற்போதைய சோதனை யுக்தி தேவை அடிப்படையிலானது மற்றும் முதன்மையாக ஆபத்தில் இருக்கும் அல்லது அறிகுறிகளைக் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளித்து பரிசோதிக்கிறோம். இது வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்பத் தொடர்ந்து திருத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.