கிழக்குப் பெங்களூரு பகுதியில் நேற்று மதியம் ஏற்பட்ட பேரிரைச்சல் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை பதிவிட்டுவந்த நிலையில், இந்திய விமானப்படை இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ளது.
அதில், இந்திய விமானப் படையினர், போர் விமானங்களை பயிற்சியில் ஈடுபடுத்தியபோது ஒலியின் வேகத்தைவிட அதிகளவு வேகமாக காற்றில் விமானங்கள் பயணித்ததால் இந்த சத்தம் ஏற்பட்டது. மதியம் 1.30 மணியளவில் பெங்களூரு புறநகர் பகுதியில் பயிற்சி வீரர்கள் 36 ஆயிரம் முதல் 40 ஆயிரம் அடி உயரத்தில் ஒலியின் வேகத்தைவிட அதிகமாக பயணித்துள்ளது. இதன்காரணமாக எழும்பிய சத்தம் இடி போன்ற பேரிரைச்சலை உருவாக்கும். இதுவே, பெங்களூரு புறநகர் பகுதியில் ஏற்பட்ட பெரும் சத்தத்திற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளனர்.