ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள எல்லைப் பகுதி பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய ராணுவத் தளபதி எம்.எம். நரவணே பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, அங்கு மாவட்ட கவுன்சில் தேர்தல் தற்போது தொடங்கியுள்ளதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.
ஆய்வுக்குப் பின் பேசிய தளபதி நரவணே, 'தற்போது பனிக்காலம் தொடங்கியுள்ளதை அடுத்து, பயங்கரவாதிகள் ஊடுருவலை மேற்கொள்ள தீவிர முனைப்பு காட்டியுள்ளனர். குறிப்பாக இங்கு ஜனநாயகத்தைச் சீர்குலைத்து அமைதியைக் கெடுக்கும் நோக்கில் பலர் சதித்திட்டம் தீட்டிவருகின்றனர்' என்று குற்றஞ்சாட்டினார்.