சர்வதேச நீதித் துறை கருத்தரங்கு 2020 டெல்லி உச்ச நீதிமன்ற வளாகத்தில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். சர்வதேச நீதித் துறை சார்ந்த முன்னணி பிரமுகர்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஜனநாயகத்தில் மாற்றுக் கருத்து வரவேற்கத்தக்கது. பொதுக்கருத்து என்பது முக்கியம். அதேவேலை, சட்ட உரிமைகளை கேள்விக்குள்ளாக்கும் போக்கு தவறானது. கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இந்தியாவின் அடையாளத்தையே அழித்துவிடும்விதமாக அவை அமைந்துவிடக்கூடாது என்றார்.
மேலும், சிலர் சமூக வலைதளம் மூலம் பரப்புரைகளை மேற்கொண்டு நீதித் துறையையும், நீதிமன்றங்களையும் விமர்சித்துவருகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு சமூக வலைதள பரப்புரை மூலம் அழுத்தம் கொடுக்க முயற்சிக்கின்றனர். இது ஆபத்தான சூழலாகும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.