தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தீவிரம் - பாதுகாப்புப் படை

பாரமுல்லா: ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோபூரின் ரெபன் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்
ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்

By

Published : Jul 12, 2020, 7:34 PM IST

Updated : Jul 12, 2020, 8:00 PM IST

பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்து கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக காவல்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்தார். மறைந்திருந்த பயங்கரவாதிகள் இன்று அதிகாலை நான்கு மணியளவில், பாதுகாப்புப் படையினர் மீது திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர், இதற்கு பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். .

முன்னதாக ஜூலை 11ஆம் தேதி ஜம்மு - காஷ்மீரின் நவுகம் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோடு வழியாக ஊடுருவ முயற்சித்த இரண்டு பயங்கரவாதிகளை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றனர். கட்டுப்பாட்டுக் கோட்டில் சந்தேகத்திற்கிடமான நடமாட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து , பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையில், எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏ.கே .47 ரக துப்பாக்கிகள் உள்பட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டன.

ஜூன் 25ஆம் தேதியன்று, சோபூரில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான மோதலில் ஒரு மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.

Terrorist killed in encounter in Jammu-Kashmir's Sopore
Last Updated : Jul 12, 2020, 8:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details