ஜம்மு காஷ்மீர் ராணுவம் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து, பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிய தேடுதல் வேட்டையை மேற்கொண்டனர். இதில், பூஞ்ச் மாவட்டம் அருகே பயங்கரவாதிகளின் மறைவிடத்தை கண்டறிந்தனர். அந்த மறைவிடத்திலிருந்து பல ஆயுதங்களையும், ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்.
பயங்கரவாதிகள் பதுங்கிய இடத்தில் 2 ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல்! - ஜம்மு காஷ்மீர்
ஜம்மு-காஷ்மீர்: ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் சேர்ந்து பயங்கரவாதிகள் பதுங்கும் இடத்தில் நடத்திய ஆய்வில் இரண்டு ஏ.கே.47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து தலைமை காவல் கண்காணிப்பாளர் ரமேஷ் அங்க்ரா கூறியதாவது, "ராணுவ வீரர்கள் மற்றும் காவல் துறையினர் ஆகியோருடன் சேர்ந்து பயங்கரவாதிகள் பதுக்கும் இடத்தைக் கண்டறிய தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். அப்போது மங்கனார் மேல் பகுதியில் உள்ள கல்சா வனப்பகுதியில், ஒரு மறைவிடம் இருந்ததைக் கண்டறிந்தோம்.
பின்னர், அந்த மறைவிடத்தை ஆய்வு செய்தபோது இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கிகள், நான்கு பத்திரிகைகள் இருந்தன. இதையடுத்து, அதனை ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர்"எனத் தெரிவித்தார். மேலும், இது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் கூறினார்.