தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காஷ்மீரில் பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி கண்டுபிடிப்பு - காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குக் குழி கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/04-July-2020/7889314_136_7889314_1593856206771.png
http://10.10.50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/04-July-2020/7889314_136_7889314_1593856206771.png

By

Published : Jul 5, 2020, 10:11 AM IST

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் கடந்த சில மாதங்களாகவே பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றனர். இச்சூழலில் அங்குள்ள ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி நாச வேலைகளில் ஈடுபட்டுவருவதாக ராணுவம், காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பதுங்குக் குழிகளைக் கண்டறிந்தனர். அங்கிருந்து துப்பாக்கிகள், கிரனேட் லாஞ்சர்கள், கையெறி குண்டுகள், வெடிகுண்டு தயாரிக்கும் உபகரணங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

அங்கு பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த யாரும் பிடிபடாத நிலையில், அவர்கள் அருகில்தான் பதுங்கியிருக்க வேண்டும் என்ற நோக்கில் தேடுதல் வேட்டையைப் பாதுகாப்புப் படையினர் முடுக்கிவிட்டுள்ளனர்.

காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கடந்த மூன்று மாதங்களாக மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு அங்கு பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருவது கவனிக்கத்தக்கது.

இதையும் படிங்க:பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்; மாநில நிர்வாகிகளை தயார் செய்யும் ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details