ஜம்மு-காஷ்மீரின் ராஜூரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில், உள்ளூர் காவல்துறை மற்றும் 38 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் அமைப்பினரும் இணைந்து கம்பீர் முகலனுக்கு அருகிலுள்ள அடர்ந்த வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
காஷ்மீர் ராஜூரியில் பயங்கரவாதிகளின் மறைவிடம்... ஆயுதங்கள், வெடிகுண்டுகள் பறிமுதல்! - ராஷ்டிரிய ரைஃபிள்ஸ்
காஷ்மீர்: ராஜூரி வனப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் மறைவிடத்திலிருந்து ஆயுதங்கள், வெடிகுண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
gun
அப்போது, அங்கு கற்களால் கட்டப்பட்ட நிலத்தடி மறைவிடத்தை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்தனர். அங்கிருந்து இரண்டு ஏ.கே. 47 துப்பாக்கிகள், 270 தோட்டாக்கள், இரண்டு சீன கைத்துப்பாக்கிகள், 75 பிகா சுற்றுகள்,10 டெட்டனேட்டர்கள் மற்றும் ஐந்து முதல் ஆறு கிலோகிராம் வெடிபொருள் ஆகியவை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, அப்பகுதி முழுவதும் பாதுகாப்புப் படையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர்.