தமிழ்நாட்டினுள் ஆறு பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பினை பலப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரி சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் சோதனை மேற்கொண்டனர். மேலும், தொடர்வண்டி நிலையம், பேருந்து நிலையம், மற்றும் மக்கள் கூடும் இடங்களில் காவலர்கள் மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்து வருகின்றனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவலா? பலப்படுத்தப்படும் பாதுகாப்பு ஏற்பாடுகள்..! - பயங்கரவாதிகள் ஊடுருவலா
புதுச்சேரி: தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உள்துறை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, புதுச்சேரியிலும் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பயங்கரவாதிகள் ஊடுருவலா
அதிகப்படியான காவல்துறையினர் இரவு பகலாகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சுப்பையா சாலையில் அமைந்துள்ள தொடர்வண்டி நிலையத்தில், திருப்பதி, சென்னை, விழுப்புரம், புதுச்சேரி வழியாக வந்தடைந்த தொடர்வண்டியையும், அதில் வந்த பயணிகளையும் காவல் கண்காணிப்பாளர் மாறன் தலைமையிலான ஆய்வாளர்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் மோப்ப நாயை கொண்டு சோதனையிட்டனர்.