அகமதாபாத் ரத யாத்திரையைச் சீர்குலைக்க பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமா?
22:41 June 10
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள ஜெகநாத்ஜி கோயிலில் வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறவுள்ள ரத யாத்திரையின்போது, பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஜெகநாத்ஜி கோயிலில், வரும் ஜூன் 23ஆம் தேதி ஆசாதி பிஜ் என்ற விழா நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கு சிறிய அளவிலான ரத யாத்திரை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த ரத யாத்திரையைச் சீர்குலைக்கும் விதமாக, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய உளவுத் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த எச்சரிக்கை தகவலை அகமதாபாத் காவல் ஆணையர் தற்போது வெளியிட்டுள்ளார்.
அதில், அனைத்து மக்களையும் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் உயர் தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.