ஜம்மு காஷ்மீரின் சிறப்பு தகுதி நீக்கப்பட்டதிலிருந்தே, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெறும் மோதல் சம்பவம் அதிகரித்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறிவருகின்றனர். இதனை தடுக்கும் விதமாக, பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். இதன் ஒரு அங்கமாக, பயங்கரவாத அமைப்பில் புதிதாக சேர்ந்த பயங்கரவாதியை பாதுகாப்பு படையினர் இன்று கைது செய்தனர்.
சோபியான் மாவட்டத்தில் உள்ள மால்தேரா பகுதியில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதியின் விவரத்தை காவல்துறை இன்னும் வெளியிடாத நிலையில், விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது.