11ஆவது பிரிக்ஸ் மாநாடு பிரேசிலில் நடந்தது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
சர்வதேச நாடுகளின் அமைதி, வளர்ச்சிக்கு பயங்கரவாதம் அச்சுறுத்தலாகத் திகழ்கிறது. உலக அளவில் அதிகரித்துவரும் பயங்கரவாதத்தால் உலகின் பொருளாதார வளர்ச்சி 1.5 விழுக்காடு குறைந்துள்ளது.
72 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. (அதாவது 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்). பிரிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை அதிகப்படுத்துவதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்.
இந்த முறை பிரிக்ஸ் மாநாடு, புதுமையான வாழ்விற்கான பொருளாதார வளர்ச்சி (Economic growth for an innovative future) என்ற கருப்பொருளில் நடக்கிறது. இது மாநாட்டுக்கு மிகவும் பொருந்தும். புதிய புதிய கண்டுபிடிப்புகளே வளர்ச்சிக்கு உதவும். வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டும் பிரிக்ஸ் நாடுகள் ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும். இணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி இதையடுத்து அவர் ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே சந்தித்துப் பேசினார். சீன அதிபருடனான சந்திப்பின்போது எல்லை பிரச்னைகள் குறித்து விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: BRICS SUMMIT 11 டிஜிட்டல் பொருளாதாரம், பயங்கரவாத ஒழிப்பை வலுப்படுத்த உதவும் - மோடி