தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையில் செயல்படும் சில நிறுவனங்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து நன்கொடை பெற்று, அவற்றை பயங்கரவாதிகளுக்கு அளிப்பதாகப் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் கடந்த அக்டோபர் 8ஆம் தேதி இந்திய தண்டனை சட்டம், பயங்கரவாதிகள் தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து, ஃபாலா-இ-ஆம் டிரஸ்ட், டெல்லியில் உள்ள அறக்கட்டளை, சாரிட்டி அலையன்ஸ், மனித நல அறக்கட்டளை, ஜே.கே. யடீம் அறக்கட்டளை, சால்வேஷன் இயக்கம் ஆகிய இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் நேற்று(அக்.28) சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களும், மின்னணு சாதனங்களும் கைப்பற்றப்பட்டதாக, என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.