தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அயோத்தி தீர்ப்பு: உபியில் கூடுதல் சிறைகள்! - உத்தரப் பிரதேச காவல் துறைத் தலைவர் ஓ.பி.சிங்

லக்னோ: அயோத்தி தீர்ப்பு இன்று வெளியான நிலையில், உத்தரப் பிரதேசத்தில் பல இடங்களில் கூடுதல் சிறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Temporary jails in all UP districts, tight security in Ayodhya

By

Published : Nov 9, 2019, 12:47 PM IST

கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த, அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சைக் கூறிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டவும், இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான கூட்டம்

இதனால் உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காலையிலேயே அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், காவல் துறை அலுவலர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

உத்தரப் பிரதேச காவல் துறைத் தலைவர் ஓ.பி.சிங்

அதுமட்டுமின்றி உத்தரப் பிரதேசத்தில் கூடுதலாகச் சிறைகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது குறித்து அந்த மாநில காவல் துறைத் தலைவர் ஓ.பி.சிங் கூறுகையில், 'சமூக வலைதளங்களில் எந்தவித வதந்தியையும் பரப்பக் கூடாது. இது குறித்து மாநிலம் முழுவதும் மதத் தலைவர்கள், பொதுமக்களுடன் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டம் நடத்தியுள்ளோம்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க;

அயோத்தி தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் விவரம்!

ABOUT THE AUTHOR

...view details