பிரபல தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல், 4ஜி சேவையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. 4ஜி சேவைக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவதற்குத் தயாராகி கொண்டிருக்கிறது. இந்த உபகரணங்கள் வாங்குதல் டெண்டர் மூறையில் தான் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவின் தொலைதொடர்பு கருவி உற்பத்தியாளர்கள் சங்கம் (TEMA) சார்பில், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குப் பரிந்துரை ஒன்று செய்யப்பட்டுள்ளது. அதில், 4ஜி சேவைக்கான உபகரணங்களை டெண்டர் மூலம் வாங்கினாலும், குறைந்தது 20 முதல் 30 விழுக்காடு வரை உள்ளூர் நிறுவனங்களுக்கு கட்டாயமாக ஒதுக்க வேண்டும்.
இந்தியாவில் உள்ள சி.டி.ஓ.டி (CDOT), ஐ.டி.ஐ (ITI), பல உள்ளூர் ஆர் அன்ட் டி (RND) நிறுவனங்கள் 4ஜி உபகரணங்களை உற்பத்தி செய்து வழங்க மும்முரமாக உள்ளனர். அரசின் திட்டத்தால் 4ஜி சேவை அமலுக்கு வர காலதாமதம் ஆக வாய்ப்புள்ளது.
உள்ளூர் நிறுவனத்திற்கு வழங்கும் திட்டத்தின் மூலம் 4ஜி சேவையை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வரலாம். தேசியப் பாதுகாப்பு கோட்பாடுகளை பார்வையில் வைத்திருக்கலாம் என்றும், 80 அல்லது 70 விழுக்காடு கொள்முதல் செய்வதற்கு உள்நாட்டு நிறுவனங்களை பயன்படுத்தலாம்.
இதன்மூலம் நட்பு இல்லாத நாடுகளிலிருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உருவாகாது. குறிப்பிட்ட விதிமுறைகள் அடிப்படையில் உள்ளூர் நிறுவனங்களுக்கு ஒதுக்கலாம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், TEMAஇன் தலைவர் என்.கே.கோயல் கூறுகையில், "தேசியப் பாதுகாப்பில் பிஎஸ்என்எல் திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பிஎஸ்என்எல் வலுவாக மாறுவது நம் அனைவரின் விருப்பம் ஆகும்.
பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎஸ்என்எல் தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 4ஜி சேவை மிகவும் அவசியம். எனவே, அரசாங்கம் 80 விழுக்காடு உபகரணங்களை உடனடியாக வாங்க அனுமதிக்க வேண்டும் என்றும், 20 விழுக்காடு உள்நாட்டு கூட்டமைப்பிற்கு ஒதுக்கப்பட வேண்டும் எனவும் TEMO பரிந்துரை செய்துள்ளது" எனத் தெரிவித்தார்.